close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் பிரபல நடிகை?

Saturday, July 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தாலும் கடந்த சில நாட்களாகவே ஓவியாவின் பெயரை டேமேஜ் ஆக்கவும், அவருக்கு டார்ச்சர் கொடுத்த காயத்ரி மற்றும் ஜூலியை நல்லவர்களாக மாற்றும் முயற்சியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்பது தெரிந்ததே. ஆனால் இன்னொரு பிரபல நடிகையும் இன்றைய நிகழ்ச்சியில் தோன்றவுள்ளாராம். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய பங்கேற்பாளரா? அல்லது கபடி டீமை போல சிறப்பு விருந்தினரா? என்பதை சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளனர்.

புதியதாக நுழையும் நடிகைக்கும் ஓவியாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. இருவருமே விமல், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்துள்ளனர். இருவருமே முன்னணி இயக்குனரான பாண்டிராஜ் படங்களின் நாயகிகள். ஓவியா நடித்த படம் ஒன்றின் இசைவெளியீட்டுக்கு இந்த நடிகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். எனவே இந்த நடிகையின் எண்ட்ரி துவண்டு போயிருக்கும் ஓவியாவுக்கு தைரியத்தை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.