close
Choose your channels

விஜய்யுடன் முதன்முதலாக இணையும் கவுதம் கார்த்திக்

Sunday, April 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய 'தெறி' திரைப்படத்தின் ரிசர்வேஷன் இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த படத்தின் டிக்கெட்டுக்கள் மின்னல் வேகத்தில் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் வரும் 14ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இடைவேளையில் கவுதம் கார்த்திக் நடித்த 'இந்திரஜித்' படத்தின் டீசர் திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. விஜய் படத்துடன் முதன்முதலாக கவுதம் கார்த்திக் படத்தின் டீசர் இணைந்து வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'தெறி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, 'இந்திரஜித்' படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'தெறி' படத்துடன் 'இந்திரஜித்' டீசர் வெளியாவதால் இந்த படத்திற்கு நல்ல புரமோஷன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலைபிரபு இயக்கியுள்ள 'இந்திரஜித்' படத்தில் வுதம் கார்த்திக், அஷ்ரிதா ஷெட்டி, சோனாரிகா பதோரியா, பிரதாப் போத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.