close
Choose your channels

கமல்ஹாசனை அடுத்து ஜெயம் ரவி?

Sunday, July 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'உத்தம வில்லன்' திரைப்படத்தின் சென்னை சிட்டி வெளியீட்டு உரிமையை பெற்ற அபிராமி ராமநாதன், அடுத்து கமல் படத்தின் டைட்டில் தயாராகியுள்ள ஜெயம் ரவியின் 'சகலகலாவல்லவன்' திரைப்படத்தின் சென்னை சிட்டி உரிமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.


முதலில் 'அப்பாடக்கர்' என்ற பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தின் டைட்டிலை சமீபத்தில் இயக்குனர் சுராஜ், 'சகலகலாவல்லவன்' என்று மாற்றினார். லட்சுமி மூவீஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, விவேக், சூரி, பிரபு உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த மாதம் ரோமியோ ஜூலியட்' என்ற வெற்றிப்படத்தை கொடுத்த ஜெயம் ரவி, ஒரே மாத இடைவெளியில் ரிலீஸ் செய்யும் இந்த படமும் அவருக்கு வெற்றிப்படமாக மாற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.