close
Choose your channels

ரஜினி-ரஞ்சித் படத்தின் நாயகி ராதிகா ஆப்தே?

Sunday, July 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதற்கு முன்னர் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை இறுதி செய்யும் தீவிர முயற்சியில் இயக்குனர் ரஞ்சித் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. முதல்கட்டமாக வயதான தாதாவாக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிக்கும் நடிகையை அவர் தேர்வு செய்யவுள்ளார்.

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி இளம் நடிகைகள் தயாராக இருக்கும் நிலையில், அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு தோனி, உலா, வெற்றிச்செல்வன் போன்ற படங்களில் நடித்து சமீபத்தில் ஆபாச புகைப்பட சர்ச்சையில் சிக்கிய 'ராதிகா ஆப்தே'வுக்கு கிடைக்கும் என தெரிகிறது.


நடிகை ராதிகா ஆப்தேவுடன் ரஞ்சித் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டதாகவும், விரைவில் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். முரளி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ப்ரவீண் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிக்க ஏற்கனவே பிரகாஷ்ராஜ், கலையரசன், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.