close
Choose your channels

ஆகஸ்ட்: காஜல் அகர்வாலின் ஹாட்ரிக் மாதம்

Tuesday, August 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் காஜல் அகர்வாலுக்கு ஏற்கனவே தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோர்களுடன் ஒரே நேரத்தில் நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்றவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இம்மாதம் அவருக்கு ஹாட்ரிக் மாதமாக அமைந்துள்ளது.
ஆகஸ்ட் 11ஆம் தேதி 'பாகுபலி' புகழ் ராணாவுடன் காஜல் அகர்வால் நடித்த 'Nene Raju Nene Manthri' என்ற தெலுங்கு படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு டோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தளபதி விஜய்யுடன் காஜல் அகர்வால் நடித்த 'மெர்சல்' படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி தல அஜித்துடன் காஜல் அகர்வால் நடித்த 'விவேகம்' திரைப்படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. மூன்று பெரிய நடிகர்களுடன் காஜல் அகர்வால் நடித்த படங்களின் ரிலீஸ் மற்றும் பாடல்கள் ரிலீஸ் ஆவதால் அவருக்கு ஆகஸ்ட் மாதம் ஹாட்ரிக் மாதமாகவே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.