close
Choose your channels

கமல்ஹாசனுடன் இணைகிறாரா மெளலி?

Saturday, August 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் தீபாவளி நாளில் வெளியிட கமல்ஹாசன் தரப்பு அனைத்து பணிகளையும் துரிதமாக செய்து வரும் நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் சில வந்து கொண்டிருக்கின்றது.

கமல்ஹாசன் நடித்த 'உத்தமவில்லன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால், அந்த படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஒரு புதிய படம் நடித்து தருவதாக ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதியின் அடிப்படையில் கமல்ஹாசன் ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இம்முறை கமல்ஹாசனுடன் கைகோர்க்க இருப்பது பிரபல இயக்குனர் மெளலி

இயக்குனர் மெளலி ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த 'பம்மல் கே.சம்பந்தம் படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவான "நளதமயந்தி" என்ற படத்தையும் இயக்கியுள்ளார். எனவே மீண்டும் அவர் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு முழுநீள நகைச்சுவை படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.