close
Choose your channels

'நிச்சயம் நீ ஜெயிப்பே'. விஜய்யிடம் வாழ்த்து பெற்ற விக்ராந்த்

Saturday, August 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் விக்ராந்த், இளையதளபதி விஜய்யின் உறவினர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது விக்ராந்த் நடித்து முடித்துள்ள 'தாக்க தாக்க' திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தை சமீபத்தில் விஜய் பார்த்து பாராட்டியதாக தகவல்கள் வந்துள்ளது.


இடுகுறித்து விக்ராந்த் கூறியபோது, ''தாக்க தாக்க" படத்தை பார்த்து விஜய் அண்ணா என்னை பாராட்டினார். அதுமட்டுமின்றி படத்தில் இரண்டாவது பாதி குறித்து என்னிடம் விரிவாக பேசினார். பின்னர் நம்பிக்கையோடு உழைக்கிற. நிச்சயம் நீ ஜெயிப்ப` என்று என்னை வாழ்த்தினார். அவரிடம் இருந்து கிடைத்த வாழ்த்து எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. மேலும் கலைப்புலி எஸ்.தாணு சார் இந்த படத்தை பார்த்தவுடன் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

மேலும் தனக்கும் விஷாலுக்கும் இடையே 12 வருட நட்பு இருக்கின்றது என்றும் விஷால் எப்போதுமே நல்ல விஷயத்துக்கு போராடும் குணம் உடையவர் என்றும், அதனால் கண்டிப்பாக நடிகர் சங்க தேர்தலில் தன்னுடைய ஆதரவு விஷாலுக்குத்தான் என்றும் விக்ராந்த் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.