close
Choose your channels

கார்த்தி-நாகார்ஜூனா பட டைட்டில் குறித்த முக்கிய அறிவிப்பு

Thursday, August 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி, நாகார்ஜூனா முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது என்பதும் வெளிநாடுகளில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் 'தோஸ்த்' என்று வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், 'தோஸ்த்' என்ற டைட்டில் இந்த படத்திற்கு முடிவு செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல்களில் உண்மை இல்லை' என்றும் நாகார்ஜூனா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா, ஜெயசுதா மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தில் அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பிவிபி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். கோபிசுந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பி.எஸ்.விநோத் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.