close
Choose your channels

சேப்பாக்கம் மைதானத்தை கலக்கிய ஓவியாவின் ஆர்மி

Tuesday, July 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன், சென்ற பின் என்று ஓவியாவை ஒப்பிட்டு பார்த்தால் இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். களவாணி உள்பட ஒருசில படங்களில் மட்டுமே நடித்த ஓவியாவுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இல்லை. ஆனால் ஒரே மாதத்தில் இதுவரை எந்த நடிகைக்கும் இல்லாத புகழ் ஏற்பட்டுவிட்டது. அதிலும் சக நடிகைகளே ஓவியாவை மனம் திறந்து பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் கேட்கவே வேண்டாம், ஓவியா புரட்சி படை, ஓவியா ஆர்மி, சேவ் ஓவியா என பல ஹேஷ்டேக்குகள் எப்போதும் டிரெண்டிங்கில் உள்ளது. இவற்றில் ஓவியா புரட்சிப்படைதான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடந்தது சேப்பாக்கம் கில்லிஸ் மற்றும் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின விளையாடினர். இந்த மைதானத்தின் ஒரு பகுதியில் ஓவியா ஆர்மி படையினர் மைதானத்தை கலக்கி வந்தனர்.

பொதுவாக கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் படங்களின் பதாதைகள் அல்லது, 4, 6 என்று ரன்களை குறிக்கும் பதாதைகளை ரசிகர்கள் வைத்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இந்த போட்டியின்போது ஓவியா ஆர்மி என்ற பதாதைகளை வைத்து மைதானத்தையே அவர்கள் கலக்கி வந்தனர். போட்டியை பார்த்த ரசிகர்களை விட இந்த ஆர்மியை பார்த்தவர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.