close
Choose your channels

கமல் வழியில் ரஜினி

Thursday, July 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

`மெட்ராஸ்` படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த இளம் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் படத்துக்காக தமிழ்நாடே தவம் கிடக்கிறது. ஓரிரு மாதங்களாகவே இந்தப் படம் குறித்த செய்திகள் வரத் தொடங்கினாலும் படப்பிடிப்பு தொடங்கப்போவது என்னவோ ஆகஸ்ட் மாதத்தில்தான். கலைப்புலி எஸ்..தாணு தயாரிப்பில் மலேசியாவில் தொடங்கவிருக்கிறது படப்பிடிப்பு.

இந்நிலையில் படத்துக்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கும் ரஞ்சித் காட்சிகள் சிறப்பாக வருவதற்காக அவற்றுக்கான ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறாராம். இந்த ஒத்திகையில் ரஜினியும் கலந்துகொண்டு ரஞ்சித் உட்பட அனைவரையும் ஆச்சரியபடுத்தினார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிருந்து வரும் தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.

நடிகர் கமல் ஹாசன் `மன்மதன் அம்பு` உள்ளிட்ட சில படங்களுக்கு நடிகர்களை வைத்து ஒத்திகை பார்த்திருக்கிறார். இப்போது ரஜினியும் படம் படத்தில் நடிப்பதற்கு முன் ஒத்திகையில் பங்கேற்றிருப்பது கோலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.