close
Choose your channels

மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' ஆடியோ விழாவில் ரஜினி?

Saturday, August 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த முதல் நேரடி தமிழ் திரைப்படமான 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த வருட இறுதியில் வெளியாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் 'ஸ்பைடர்' படத்தின் தமிழ் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிகிறது.
இந்த விழாவில் பல கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா அவர்கள் நம்மூர் சிவாஜிகணேசனுக்கு இணையானவர் என்பதாலும், அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ள ரஜினிகாந்த், அவரது மகன் மகேஷ்பாபுவின் முதல் தமிழ் படத்தின் விழாவில் கலந்து கொள்வார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.