close
Choose your channels

அஜீத்துக்கு வில்லனாகிய சூர்யாவின் வில்லன்?

Thursday, August 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிபு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் அஜீத் டாக்சி டிரைவராகவும், ஸ்ருதிஹாசன் வழக்கறிஞராக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


இந்த படத்தில் மெயின் வில்லன் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் கபீர்சிங் நடித்து வரும் நிலையில் இன்னும் ஒரு புதிய வில்லனும் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சூர்யா நடித்த 'ஆதவன்' படத்தில் வில்லனாக நடித்த ராகுல்தேவ் 'தல 56" படத்தில் புதிய வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்துடன் இணைந்து நடிப்பது எனக்கு பெருமையாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என ராகுல் தேவ் கூறியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட படக்குழுவினர் முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.