close
Choose your channels

அஜித்தின் 'விவேகம்' படக்குழு சென்னை திரும்பும் தேதி!

Tuesday, June 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஒருசில விடுபட்ட காட்சிகளில் படப்பிடிப்பிற்காக மீண்டும் அஜித், விவேக் ஓபராய் உள்பட படக்குழுவினர் கடந்த வாரம் செர்பியா சென்றனர் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் அஜித், விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருவதாகவும், வரும் வியாழக்கிழமை இந்த படப்பிடிப்பு முடிவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த வார இறுதியில் அஜித், விவேக் ஓபராய், சிறுத்தை சிவா உள்பட படக்குழுவினர் இந்தியா திரும்பவுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் டிரைலர் மற்றும் பாடல்களை ரிலீஸ் செய்யும் தேதி குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.