close
Choose your channels

4வது முறையாக விஜய்யுடன் இணையும் பரதன். புதிய தகவல்

Saturday, November 21, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 60வது படமான 'விஜய் 60' படத்தை பரதன் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே விஜய் நடித்த 'அழகிய தமிழ்மகன்' படத்தை அவர் இயக்கியுள்ளதால் இரண்டாவது முறையாக விஜய்யுடன் அவர் இணைகிறார் என அனைவரும் நினைத்து கொண்டிருக்கையில் விஜய்யுடன் தான் நான்காவது முறையாக இணைவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பரதன் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'கில்லி' படத்திற்கு தான் வசனம் எழுதியதாகவும், அதன் பின்னர் இரண்டாவதாக 'மதுர' படத்திற்கும் வசனம் எழுதியதாகவும், மூன்றாவதாக 'அழகிய தமிழ்மகன்' படத்தை இயக்கியதாகவும் தற்போது 'விஜய் 60' மூலம் நான்காவது முறையாக இணைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பரதன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவாளராகவும், ப்ரவீண் படத்தொகுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை 'வீரம்' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.