close
Choose your channels

விஜய் விஷயத்தில் சிம்புவை பின்பற்றிய விக்ராந்த்

Friday, August 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மூன்று வருடங்கள் கழித்து கடுமையான பல சோதனைகளை சந்தித்து சிம்புவின் 'வாலு' படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகியது. இந்த படம் வெளிவர இளையதளபதி விஜய் தானாகவே முன்வந்து சிம்புவுக்கு உதவி செய்தார். விஜய் தலையிட்டதால்தான் இந்த படம் வெளிவந்தது என்று கூறப்படுகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 'வாலு' படத்தின் தொடக்கத்தில் 'இளையதளபதிக்கு நன்றி' என்ற டைட்டில் கார்டு போட்டு விஜய்யை 'வாலு' படக்குழுவினர் கெளரவித்திருந்தனர்.

இந்நிலையில் விக்ராந்த் நடித்த 'தாக்க தாக்க' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை தனது மனைவியுடன் சமீபத்தில் பார்த்த இளையதளபதி விஜய், 'படத்தின் முதல் பாதி அற்புதமாக இருப்பதாகவும், இரண்டாவது பாதியின் 40 நிமிடங்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த கருத்து படத்திற்கு பெரிய விளம்பரமாக கருதப்பட்டது.

இந்நிலையில் இன்று ரிலீஸாகியுள்ள 'தாக்க தாக்க' திரைப்படத்தின் டைட்டில் கார்டிலும் இளையதளபதி விஜய் மற்றும் சங்கீதா விஜய் ஆகியோர்களுக்கு நன்றி என்ற டைட்டில் கார்டுடன் படம் தொடங்கியுள்ளது. சிம்புவை பின்பற்றி விக்ராந்த் படக்குழுவினர்களும் இளையதளபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.