close
Choose your channels

நண்பர்களுக்காக தாக்குதலை திடீரென நிறுத்திய விக்ராந்த்?

Thursday, July 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் ஜூலை 31ஆம் தேதி ஜெயம் ரவியின் சகலகலாவல்லவன், விக்ரம் பிரபுவின் 'இது என்ன மாயம்', விஜய் சேதுபதியின் 'ஆரஞ்சு மிட்டாய்', விக்ராந்த் நடித்த 'தாக்க தாக்க' ஆகிய படங்கள் ரிலீஸாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஜூலை 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படங்களின் ஹீரோக்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு மற்றும் விக்ராந்த் ஆகியோர் இளையதலைமுறை நடிகர்கள் மட்டுமின்றி ஒருவருக்கொருவர் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தங்களுக்குள் போட்டி ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, இந்த போட்டியில் இருந்து 'தாக்க தாக்க' படம் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை 'தாக்க தாக்க' படக்குழுவினர் 'திரையுலகின் நன்மை கருதி தாக்குதலை (Release Date) தள்ளி வைக்கிறது' என்ற புதுமையான விளம்பரம் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இளையதலைமுறை நடிகர்களிடம் காணப்படும் இந்த ஒற்றுமை, கோலிவுட்டை ஆரோக்கியமான பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.