close
Choose your channels

விஷாலின் 'பாயும் புலி' சென்சார் விபரங்கள்

Saturday, August 22, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒருபக்கம் இளையதளபதியின் 'புலி' படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் புரட்சி தளபதியின் 'பாயும் புலி' பாய்வதற்கான அனுமதியை பெற்றுவிட்டது. ஆம் விஷாலின் பாயும் புலி' திரைப்படம் இன்று சென்சார் செய்யப்பட்டு, "யூ' சர்டிபிகேட்டும் பெற்றுள்ளது.

'பாயும் புலி' படத்திற்கு 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளதால் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிச்சலுகை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் தயாரிப்பாளர் உள்பட படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் சர்டிபிகேட் கிடைத்துவிட்டதால் படக்குழுவினர் படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 4 என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

விஷால், காஜல் அகர்வால், சூரி, சமுத்திரக்கனி, ஆர்.கே, ஜெயப்பிரகாஷ், ஆனந்த் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள 'பாயும் புலி' படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்துள்ளனர். பாண்டியநாடு படத்திற்கு பின்னர் விஷாலை இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தில் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.