close
Choose your channels

'விவேகம்' ரிலீஸ் தேதி! இயக்குனர் சிவாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு

Tuesday, August 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்ட நிலையில் நேற்று இரவு இயக்குனர் சிவா தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'விவேகம்' படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.

இந்த படம் இம்மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கிட்டத்தட்ட அனைவரும் நினைத்து கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக ஆகஸ்ட் 24ஆம் தேதி வியாழக்கிழமை 'விவேகம்' உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று சிவா அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதூர்த்தி விடுமுறை தினம் என்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று தொடர் விடுமுறை நாட்கள் இருக்கின்றது. எனவே இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் இதுவரை ஏற்படுத்தாத புதிய சாதனையை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.