close
Choose your channels

கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கும் கமல் பட இயக்குனர்

Saturday, October 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ஜித்துஜோசப் இயக்கிய படம் 'பாபநாசம்'. மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்கான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.

இந்த நிலையில் இயக்குனர் ஜித்துஜோசப், கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் மிகவிரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.

இயக்குனர் ஜித்துஜோசப் தற்போது மோகன்லால் மகன் பிரனவ் நடித்துள்ள ஆதி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இவர் பாலிவுட்டில் 'தி பாடி' என்ற படத்தையும் மலையாளத்தில் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் பட ஒன்றையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.