close
Choose your channels

அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகும் அதர்வா, ஜீவா படங்கள்

Tuesday, April 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் இரண்டு இளையதலைமுறை நடிகர்களான அதர்வா மற்றும் ஜீவா ஆகியோர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதர்வா நடித்த '100' திரைப்படம் மே 3ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி மே 9ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதர்வா, ஹன்சிகா, யோகிபாபு, உள்பட பலர் நடித்த இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவில் ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் அதர்வா படம் வெளியாகும் அடுத்த நாள் அதாவது மே 10ஆம் தேதி ஜீவாவின் நீண்ட நாள் தாமதமான படமான 'கீ' திரைப்படம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவா, நிக்கி கல்ராணி, கோவிந்த் பத்மசூர்யா, அனைகா சோட்டி, ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி, மனோபாலா, உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை காளீஸ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.