close
Choose your channels

சீமராஜாவின் அந்த 20 நிமிடங்கள்: இயக்குனர் வெளியிட்ட ரகசியம்

Wednesday, September 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' திரைப்படம் வரும் 13ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதால் இந்த படமும் சிவகார்த்திகேயனின் மற்ற படங்கள் போலவே மாஸ் கலெக்சன் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் 20 நிமிடங்கள் பிளாஷ்பேக் காட்சிகள் இருப்பதாகவும், இந்த காட்சிகள் படத்தின் ஹைலைட் காட்சிகளாக இருக்கும் என்றும் இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார். இந்த பிளாஷ்பேக் காட்சிகளில் சிவகார்த்திகேயன் ராஜா வேடத்தில் நடித்திருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் ராணி வேடத்தில் நடித்திருப்பதாகவும் இந்த காட்சிகள் உணர்வுபூர்வமாக இருக்கும் என்றும் இயக்குனர் பொன்ராம் கூறியுள்ளார். அதேபோல் இந்த பிளாஷ்பேக் பகுதியில் சிக்ஸ்பேக் உடல்கட்டுடன் சூரி தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.