close
Choose your channels

ரஜினியின் '2.0' சீன ரிலீஸ் தேதி அறிவிப்பு

Saturday, August 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிய '2.0' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆன நிலையில் இந்த படம் சீனாவில் கடந்த ஜூலை மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த படம் சீனாவில் வெளியிடுவதில் ஒருசில காலதாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த படத்தின் சீன ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சீனாவில் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சீனாவில் புரமோஷனும் தொடங்கிவிட்டது.

ஏற்கனவே '2.0' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.800 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில் சீன வசூலையும் சேர்த்தால் மொத்த வசூல் ரூ.1000 கோடியை நெருங்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.