close
Choose your channels

40 வயதில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் அஜித் பட நாயகி: வைரல் வீடியோ

Saturday, May 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை 40 வயதிலும் வேற லெவல் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் ’பைவ் ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அதனை அடுத்து அவர் அஜித்தின் ’வரலாறு’ சேரனின் ’ஆட்டோகிராப்’ உள்ளிட்ட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை கனிகா தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கனிகா, அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்வார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் கனிகா, டீன் ஏஜ் பெண் போல வேற லெவலில் வொர்க்அவுட் செய்யும் காட்சிகள் உள்ளன .

இந்த வீடியோவில் கனிகா கூறியபோது, ‘கட்டுக்கோப்பான சிக்ஸ்பேக் உடலை வைத்துக் கொள்வதற்கோ, ஏராளமான சினிமா வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ நான் வொர்க்கவுட் செய்யவில்லை. 11 வயது குழந்தையின் தாயாரான நான் எனது உடம்பை மிகவும் நேசிக்கின்றேன். எனது உடம்பை நான் பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் தான் இந்த கடுமையான வொர்கவுட்களை செய்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.