close
Choose your channels

அனிருத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Friday, May 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகிய அனிருத், முதல்முறையாக விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி ஆகியோர்களுடன் இணைந்து இசையமைத்த திரைப்படம் 'தும்பா. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்குள் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படகுழுவினர் முயற்சித்தாலும் ஒவ்வொரு வாரமும்
தொடர்ச்சியாக பல திரைப்படங்கள் ரிலீசாகி கொண்டே இருந்ததால் இந்த படம் ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' படத்தின் நாயகன் தர்ஷன், கீர்த்தி பாண்டியன் 'கலக்க போவது யாரு' புகழ் தீனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஹரிஷ் ராம் இயக்கியுள்ளார். நரேன் இளன் ஒளிப்பதிவில், கலைவாணன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் இந்தியில் தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் 'புலி' ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.