close
Choose your channels

கலா மாஸ்டரிடம் பொய் சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்த மீனா: வைரல் புகைப்படங்கள்

Saturday, September 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கலா மாஸ்டரிடம் நடிகை மீனா பொய் சொல்லி அதன் பிறகு அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிகழ்வின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம் முதல் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை மீனா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவர் மிகுந்த அதிர்ச்சியில் இருந்தார் என்பதும் அவருக்கு ஆறுதலாக அவருடைய திரையுலக நண்பர்களான கலா மாஸ்டர், சங்கீதா, ரம்பா, சங்கவி ஆகியோர் இருந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தனது 18வது திருமன நாளை கலா மாஸ்டர் நேற்று கொண்டாடிய நிலையில் அந்த விழாவுக்கு வரும்படி மீனாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் மீனா தான் ஊரில் இல்லை என்று என்று கூறியதால் கலா மாஸ்டர் மிகுந்த வருத்தம் அடைந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று கலா மாஸ்டர் தனது திருமண நாளை கொண்டிருக்கும்போது திடீரென மீனா வருகை தந்து அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கலா மாஸ்டரின் திருமண நாள் விழாவில் மீனா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.