close
Choose your channels

'எதிர்நீச்சல்' சீரியலில் திடீர் திருப்பம்.. ஆதி குணசேகரன் கேரக்டருக்கு இயக்குனர் வைத்த டுவிஸ்ட்..!

Thursday, September 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்

அவரது கேரக்டரில் வேறு நடிகரை நடிக்க வைப்பதற்கு முயற்சிகள் செய்யப்பட்டதாகவும் வேல ராமமூர்த்தி, இளவரசு உட்பட ஒரு சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது.

ஆனால் தற்போது 'எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குனர் திருச்செல்வம் ஒரு புதிய ட்விஸ்ட் கொடுத்துள்ளார். ஆதி குணசேகரன் கேரக்டர் லெட்டர் எழுதி வைத்துவிட்டு கண்காணாத இடத்துக்கு சென்று விட்டது போன்று கதையை திருப்பி உள்ளார். எனவே இப்போதைக்கு ஆதி குணசேகரன் கேரக்டர் சீரியலுக்கு தேவை இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அவரை அவரது சகோதரர்கள் தேடுவது போன்று இன்னும் சில மாதங்களுக்கு சீரியலை ஓட்டிவிடலாம்.

ஆனால் அதே நேரத்தில் ஆதி குணசேகரனுக்கு அண்ணன் ஒருவர் இருப்பது போன்றும் அவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது போன்றும் சீரியலின் கதையை அவர் மாற்றி உள்ளார். எனவே ஆதி குணசேகரன் கேரக்டர் இல்லாமல் இந்த சீரியலை தொடர இயக்குனர் திருச்செல்வம் முடிவு செய்து இருப்பது பெரும் டுவிஸ்ட்டாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.