close
Choose your channels

கடவுள் இருக்கானா குமாரு? அர்ச்சனாவின் கேள்விக்கு 'பகவான்' வடிவில் பதிலளித்த பிக்பாஸ்!

Friday, December 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் சனிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி மற்றும் ரியோ ஆகிய இருவரும் எவிக்சனில் இருந்து காப்பாற்றபட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்த அறிவிப்பு அர்ச்சனாவுக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. அந்த வாரம் ஆரி வெளியேறுவார் என்று அர்ச்சனா எதிர்பார்த்திருந்த நிலையில் முதல் நபராக ஆரி காப்பாற்றப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக ரம்யா, பாலாஜி, ஷிவானி ஆகியோர்களிடம் ’கடவுள் இருக்கானா குமாரு? என்று திரும்பத் திரும்ப கேட்டு வெறுப்பேற்றும் வகையில் நடந்து கொண்டார்

இந்த நிலையில் ’கடவுள் இருக்கான் குமாரு’ என்று நேற்று ’பகவான்’ மூலம் பிக்பாஸ் பதில் அளித்துள்ளதாக நெட்டிசன்கள் பதிவுகளை செய்து வருகின்றனர். நேற்று ஆரி நடித்த ’பகவான்’ என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. ஆரியின் இந்த அட்டகாசமான போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஆரியின் சக போட்டியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடதக்கது

‘கடவுள் இருக்கானா குமாரு’ என்று கடந்த வாரம் அர்ச்சனா கேட்ட கேள்விக்கு சரியாக ஒரு வாரத்தில் கடவுள் பெயரான ’பகவான்’ என்ற பெயரில் வெளியாகும் ஆரி படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு அர்ச்சனாவுக்கு பிக்பாஸ் சரியான பதிலடியை கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது வைரலாகி வருகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.