close
Choose your channels

காமெடிக்கு மாறிய நயன்தாரா ஹீரோ

Tuesday, January 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளிவந்த வெற்றி படங்களில் குறிப்பிடத்தக்க படம் 'மாயா' என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. இந்த படத்தின் வெற்றிக்கு நயன்தாரா முக்கிய காரணமாக இருந்தாலும் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்திருந்த ஆரியும் சிறப்பாக நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.


இந்நிலையில் ஆரி அடுத்து ஒரு காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'உன்னோடு கா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை புதுமுக இயகுனர் ஆர்கே இயக்குகிறார். இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். ஆரியின் பெற்றோர்களாக பிரபு மற்றும் ஊர்வசி நடிக்கவுள்ளனர். மேலும் மனோபாலா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யா இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு 'மங்காத்தா' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொங்கலுக்கு பின்னர் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.