close
Choose your channels

நடிகர் மாதவன் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

Thursday, May 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மாதவன் நடித்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடிகர் மாதவன் நடித்து, தயாரித்து இயக்கிய திரைப்படம் ’ராக்கெட்டரி’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும், ஜூலை 1ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 19ஆம் தேதி வியாழனன்று இரவு 9 மணிக்கு இந்த படம் திரையிடப்படும் என்றும், இந்த படத்தை சர்வதேச பிரபலங்கள் பார்க்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்ட உடன் இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளி பொறியாளர் நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான இந்த படத்தில் நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடித்து உள்ளதோடு இந்த படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்பட பல மொழிகளில் ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்படுவது படக்குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நடிகர் மாதவன் கூறியபோது, ‘நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன் என்றும் இந்த படத்தை தயாரிக்கும் போது இவ்வளவு பெரிய விஷயங்கள் எல்லாம் நடக்கும் என்று நான் நம்பவில்லை என்றும் கடவுள் அருளால் இந்த படத்திற்கு நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன் என்றும் இந்த படம் இந்தியாவை பெருமைப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.