close
Choose your channels

இந்தியாவை பெருமைப்படுத்திய நடிகர் மாதவனின் மகன்: குவியும் வாழ்த்துக்கள்!

Saturday, April 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மாதவனின் மகன் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .

பிரபல நடிகர் மாதவனின் மகன் நீச்சல் வீரர் என்பதும் அவர் ஏற்கனவே ஒரு சில பதக்கங்களை வென்றுள்ளார் என்பதையும் பார்த்துள்ளோம். இந்த நிலையில் தற்போது கோபன்ஹேகன் என்ற இடத்தில் நடந்த தனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட இரண்டு நீச்சல் வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்று உள்ளனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவைச் சேர்ந்த ஷாஜன் பிரகாஷ் தங்கப் பதக்கத்தையும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு பதக்கங்களை குவித்த இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக நடிகர் மாதவனின் மகனுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.