close
Choose your channels

விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் 'கவண்' படத்தில் இன்னொரு ஹீரோ

Thursday, October 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் நடிப்பில் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படத்தின் டைட்டில் 'கவண்' என்று அறிவிக்கப்பட்டதை நேற்று பார்த்தோம். இந்த படத்தின் டைட்டில் நேற்று சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு ஹீரோ இணணந்துள்ளார்.
'கற்க கசடற', 'நெஞ்சத்தை கிள்ளாதே' உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த விக்ராந்த், 'கவண்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர்கள் சுபா திரைக்கதை வசனம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.