close
Choose your channels

யோகிபாபுவுக்கு நன்றி கூறிய விவேக் மகள்!

Friday, September 24, 2021 • தமிழ் Comments

சமீபத்தில் நடிகர் விவேக் எதிர்பாராத மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் தற்போது அவரது மகள் நடிகர் யோகிபாபுவுக்கு சமூக வலைதளம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த சிமா விருது வழங்கும் விழாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ’தாராள பிரபு’ என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த காமெடி நடிகர் என்ற விருது நடிகர் விவேக் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் யோகிபாபு, விவேக்கின் சார்பில் பெற்றுக்கொண்டார். இதனை அடுத்து அந்த விருதை எடுத்துக்கொண்டு விவேக்கின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரிடமும் யோகிபாபு ஒப்படைத்தார்.

இதுகுறித்து நடிகர் விவேக்கின் மகள் விவேக்கின் டுவிட்டர் பக்கத்தில் ’எனது தந்தைக்கு சிமா விருது வழங்கியதற்கு மிகவும் நன்றி. அந்த விருதை கொண்டு வந்து கொடுத்த யோகிபாபு அண்ணாவுக்கும் எனது மிகப்பெரிய நன்றி. மேலும் ’தாராள பிரபு’பட குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

நடிகர் விவேக் மறைந்த பின்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் டுவிட் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz