close
Choose your channels

ஷங்கரின் மகள் அதிதி ஒரு மருத்துவரா? இணையத்தைக் கலக்கும் தகவல்!

Saturday, January 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிதி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒருசில புகைப்படங்களால் அவர் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.

இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார். அதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இரண்டாவது மகள் அதிதி. இவர் சென்னை ராமகிருஷ்ணா மருத்துவமனைக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் முடித்துள்ளார். கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தமிழகச் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கையால் அவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இதனால் நடிகை சாய்பல்லவி, நடிகை ஐஸ்வர்யா லட்சுமியைத் தொடர்ந்து இன்னொரு மருத்துவர் தமிழ் சினிமாவிற்கு வருகை தந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்த்தி, இயக்குநர் முத்தையா கூட்டணியில் உருவாகிவரும் “விருமன்“ திரைப்படத்தில் அதிதி சங்கர் தற்போது இணைந்து நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரைப் பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும் அதில் அவருடைய கேரக்டர் “தேன்மொழி“ என்பதும் குறித்த தகவல்கள் வெளியாகி இருந்தன. இதைத்தவிர இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள “கொரோனா குமார்“ திரைப்படத்தில் அதிதி நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் அதிதி தற்போது எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் புதுப்புது போட்டோஷுட் புகைப்படங்களையும் அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos