close
Choose your channels

கேஷுவல் கெட்டப்பில் நடிகை அஞ்சலி வெளியிட்ட ஹாட் புகைப்படம் வைரல்!

Saturday, October 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை அஞ்சலி. இவர் ராம் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான “கற்றது தமிழ்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

இதையடுத்து “அங்காடித்தெரு” திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். பின்னர் “எங்கேயும் எப்போதும்“ “மங்காத்தா“, “சேட்டை“, “சிங்கம் 2“, மாப்ள“, “இறைவி“ போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தற்போது தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

தமிழில் “பூச்சாண்டி“, “காண்பது பொய்“, “மத கஜ ராஜா“ போன்ற ஒருசில திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை அஞ்சலி சமூகவலைத் தளத்திலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவர் பதிவிடும் போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர்.

தற்போது நடிகை அஞ்சலி கேஷுவல் கெட்டப்பில் போஸ் கொடுத்திருக்கும் கிளாமர் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பாசிடிவ் கமெண்டுகளைப் பெற்று வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.