close
Choose your channels

'கபாலி' தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் படம்: டைட்டில் அறிவிப்பு!

Friday, February 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’, விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

நடிகை தன்ஷிகா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு ’மனோகரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை நவாஸ் அகமது என்பவர் இயக்க உள்ளார். கார்த்திக் ராஜா இசையில் மணி ஒளிப்பதிவில் சினேகன் பாடல் வரிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ஏற்கனவே ஒரு சில படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் தன்ஷிகா நடித்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.