close
Choose your channels

சின்னத்தல'யுடன் எடுத்த புகைப்படம்: மகிழ்ச்சியுடன் பகிர்ந்த 'மாஸ்டர்' நடிகை!

Wednesday, March 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’96’ என்ற படத்திலும் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்தவர் நடிகை கௌரி கிஷன். இவர் சமீபத்தில் தனது டுவிட்டரில் சிஎஸ்கே வீரர் சின்ன தலயுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

நடிகை கெளரி கிஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் சின்ன தல என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து, அதில் சின்ன தலயுடன் புகைப்படம் எடுத்தது மிகவும் மகிழ்ச்சி என்றும் தான் நினைத்தது நடந்துவிட்டது என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும், இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கௌரி கிஷன் தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள ‘கர்ணன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளார் என்பதும் இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.