close
Choose your channels

பிறந்தநாளுக்கு பிகினி புகைப்படம் பதிவிட்ட நடிகை ஹன்சிகா… வைரல் பிக்!

Tuesday, August 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என அன்போடு அழைக்கப்பட்டு வருவபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொழுகொழுவென இருக்கும் இவரது அழகுக்கும் க்யூட் ரியாக்சனுக்கும் ஏராளமான இளம் ரசிகர்கள் இவரை மொய்த்து வருகின்றனர். நடிகர் தனுஷ், விஜய், சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவந்த இவர் திடீரென தனது உடல்எடையை குறைத்து ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.  

இந்நிலையில் உடல்எடையை குறைத்த பின்பு, ஏராளமான சினிமா வாய்ப்புகள் குவியும் என நினைத்த நடிகை ஹன்சிகா, கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மும்பையில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். அந்த வகையில் நேற்று தன்னுடைய வீட்டிலேயே மிக எளிமையாக தனது 30 ஆவது பிறந்தநாளையும் கொண்டாடியுள்ளார்.

இதில் தனது பிறந்தநாளை ஒட்டி நடிகை ஹன்சிகா 10 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களது மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. நடிகை ஹன்சிகாவின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் கொரோனா நேரத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி குறித்து அறிவுறுத்திய நடிகை ஹன்சிகா தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி ஒரு பிகினி புகைப்படத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதனால் பிங் நிறத்தில் பிகினி அணிந்த நடிகை ஹன்சிகாவின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.  இந்நிலையில் பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ் போன்ற படங்களில் இணைந்து நடித்துவரும் நடிகை ஹன்சிகாவின் 50 திரைப்படமான “மகா”வும் விரைவில் வெளிவர உள்ளது. இதைத்தவிர தெலுங்கில் ஒரு வெப்சீரிஸிலும் அவர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.