close
Choose your channels

வெளிநாட்டில் தோழியுடன் செம ஆட்டம்.. மீனாவின் மாற்றத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Wednesday, September 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீனா தனது தோழியுடன் வெளிநாட்டில் செம ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் மீனா தனது கணவர் இறப்பில் இருந்து மீண்டு விட்டதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மீனா என்பதும் அவரது கணவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் என்பது தெரிந்ததே.

கணவரது மறைவால் மிகவும் சோகமாக இருந்த நடிகை மீனாவை அவரது தோழிகள் தேற்றி அவரை மீட்டு கொண்டுவர முயற்சி செய்தனர். குறிப்பாக கலா மாஸ்டர், சினேகா, பிரீத்தா ஹரி, ரம்பா உள்ளிட்ட சினிமா தோழிகள் அவரை அடிக்கடி சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமின்றி வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றனர். சமீபத்தில் நடந்த கலா மாஸ்டரின் பிறந்தநாள் விழாவில் மீனா கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியது.

இந்தத நிலையில் பிரபலங்களுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும் ரேணுகா தேவியுடன் நடிகை மீனா வெளிநாடு சென்றுள்ளார். அவர் வெளிநாட்டு வீதிகளில் ரேணுகாவுடன் சேர்ந்து செம ஆட்டம் போடும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீனா மெல்ல மெல்ல தனது கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீண்டுவிட்டது மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.