close
Choose your channels

நடிகை நமீதாவின் பிரெக்னெண்ட் போட்டோஷூட்: வைரல் வீடியோ

Saturday, June 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை நமீதா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக உள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவை தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் நடித்த ’பில்லா’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை நமீதா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டில் தனது நீண்ட நாள் நண்பரான வீரேந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் அவர் படங்களில் நடிப்பது மற்றும் தயாரிப்பதில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமான நமீதா அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரெக்னெண்ட் போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.