close
Choose your channels

உறவினர்களுடன் கலர்புல் புகைப்படங்கள் எடுத்த ரம்யா பாண்டியன்.. வீட்ல என்ன விசேஷம் தெரியுமா?

Sunday, April 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்யா பாண்டியனின் தாத்தாவின் 93வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் ரம்யா பாண்டியன் மற்றும் அவருடைய உறவினர்கள் உள்பட பலர் கலர்ஃபுல் புகைப்படங்கள் அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது

நடிகை ரம்யா பாண்டியன், நடிகை அருண் பாண்டியனின் நெருங்கிய உறவினர் என்பதும் அவர்கள் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தனது சொந்த ஊருக்கு செல்லும் புகைப்படங்கள், வீடியோக்களை ரம்யா பாண்டியன் மற்றும் அவரது சகோதரி கீர்த்தி பாண்டியன் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது தனது தாத்தாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ரம்யா பாண்டியன் நெல்லை சென்றுள்ளார்.

அங்கு அவர் தனது தாத்தா உள்பட அவருடைய உறவினர்களுடன் எடுத்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. ரம்யா பாண்டியன் தனது நெருங்கிய சொந்தங்களுடன் எடுத்த கலர்புல் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தனது 93 வயது தாத்தாவுடன் அவர் இணைந்த புகைப்படத்தை பதிவு செய்து அதில் அவர் கூறியிருப்பதாவது: 93வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா! நேர்மை, கடின உழைப்பு, நண்பர், தத்துவஞானி மற்றும் சாமர்த்தியமான ஆலோசகர், உங்கள் உறவினர்கள் மீது அன்பு, 42 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் நம் தேசத்திற்கு சேவை செய்த உங்கள் நற்பண்புகளால் எனக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தீர்கள். புத்திசாலித்தனமான இதயம், இருண்ட சுரங்கப் பாதையின் முடிவில் ஒளியைக் காணும் திறன் ஆகியவை என் குழந்தை பருவத்திலிருந்தே என்னைக் கவர்ந்த ஒன்று.

எல்லாவற்றிற்கும் மேலாக, சொந்தத் தொழிலில் கவனம் செலுத்துவது அமைதியான வாழ்க்கைக்கு வழிகோலுகிறது என்பதை நீங்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்தீர்கள். இவ்வாறு கூறுவதற்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு உதாரணமாக இருந்தீர்கள். உங்கள் வாழ்க்கை எங்களுக்கும் வரவிருக்கும் தலைமுறைக்கும் உயர்தரத்தை அமைக்கும் அளவுகோலாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.