close
Choose your channels

என்ன ஆச்சு ராஷி கண்ணாவுக்கு? மினுமினுக்கும் கிளாமர் புகைப்படங்களால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

Monday, June 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராஷி கண்ணா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மினுமினுக்கும் படு கிளாமரான கவர்ச்சி படங்களை பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அடியெடுத்து படித்தவர் நடிகை ராஷி கண்ணா. இதனை அடுத்து ’அடங்கமனு’ ’அயோக்யா’, ’சங்கத்தமிழன்’ ’துக்ளக் தர்பார்’ ’அரண்மனை 3’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது அவர் ’அரண்மனை 4’ படத்திலும், ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா 10 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை வைத்துள்ளார். தனது ஃபாலோயர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா சற்றுமுன் கருப்பு காஸ்டியூமில் படு கிளாமரான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து ராஷி கண்ணாவிடம் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை என்றும் ராசி கண்ணாவுக்கு என்ன ஆச்சு என்றும் இது போன்ற மோசமான போட்டோஷூட் புகைப்படங்களை தவிர்க்கவும் என்றும் ஒரு சில ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் பல ரசிகர்கள் இந்த மினுமினுக்கும் புகைப்படங்களை ரசித்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் ஒரு சில மணி நேரத்தில் இந்த புகைப்படங்களுக்கு சுமார் 5 லட்சம் லைக் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.