close
Choose your channels

நடிகை ஸ்ரேயாவை ஏமாற்றிய கணவர்: வைரல் வீடியோ

Sunday, July 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ரேயாவை அவருடைய கணவர் ஏமாற்றிய வீடியோ ஸ்ரேயாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வைரலாகி வருகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தனது கணவருடன் இணைந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ஸ்ரேயா சரண் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது கணவர் அவரை திறமையாக ஏமாற்றுவது குறித்த காட்சிகள் உள்ளன

ஸ்ரேயாவை கண்ணை மூடிக்கொள்ள செய்துவிட்டு மேஜிக் செய்வது போல் ஏமாற்றும் இந்த வீடியோ கடைசியில் ஸ்ரேயா கணவரை பார்த்து சிரிப்பதும் அதன் பின்னர் இறுதியில் முத்தமிடுவதும் ஆன காட்சிகளுடன் முடிகிறது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை ஸ்ரேயா சரண் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகிவரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.