close
Choose your channels

'சாமி 2' டிரைலரை கலாய்த்த நடிகை கஸ்தூரி

Monday, June 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம், கீர்த்திசுரேஷ், பாபிசிம்ஹா நடிப்பில் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. நேற்று வெளியான இந்த படத்தின் 2 நிமிட டிரைலர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றுள்ளது. சமூக வலைத்தள பயனாளிகள் பலர் இந்த டிரைலரை கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் டிரைலர் குறித்து குறிப்பிடும்போது, 'முந்தா நாளு வந்த டீஸர்ல கலாய்ச்சிருந்த .அத்தனை டெம்பிளேட் சீன்ஸையும் ஒண்ணு சேர்த்து ஒரு ட்ரைலெர். ஸ்ஸ்ஸப்பா' என்று குறிப்பிட்டுள்ளார்.

கஸ்தூரியின் இந்த டுவிட்டுக்கு விக்ரம் ரசிகர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்ட, அவர்களுக்கு கஸ்தூரி பதிலடி கொடுக்க என டுவிட்டரே ஒரே பரபரப்பில் உள்ளது. முந்தா நாள் வந்த டீசர் என்று கஸ்தூரி குறிப்பிடும் திரைப்படம் 'தமிழ்ப்படம் 2.0' படத்தின் டீசர் என்பதும் அந்த படத்தில் கஸ்தூரி ஒரு குத்துப்பாட்டுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.