close
Choose your channels

பாஜகவில் இணையும் கமல்-ரஜினி பட நாயகி!

Saturday, September 28, 2019 • தமிழ் Comments
BJP
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் உள்ள பல நடிகர், நடிகைகள் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த பல வருடங்களாக அரசியலில் இருந்து வருபவர்களில் ஒருவர் நடிகை விஜயசாந்தி. ரஜினிகாந்த் நடித்த ‘மன்னன்’, கமல்ஹாசன் நடித்த ‘இந்திரன் சந்திரன்’ உள்பட பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த விஜயசாந்தி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசியலில் பல வருடங்களாக கலக்கி வருகிறார்.

முதலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கட்சியில் இருந்த விஜயசாந்தி பின்னர் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் அரசியலில் வீழ்ச்சி அடைந்த விஜயசாந்தி தற்போது பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜயசாந்தி பாஜகவில் இணைவது குறித்து கடந்த சில நாட்களாக அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பேசி வந்ததாகவும், தற்போது பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி விஜயசாந்தி பாஜகவில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் விரைவில் நடைபெறவுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் விஜயசாந்தியை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தவும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.