close
Choose your channels

அஜித்தை அடுத்து ரஜினியுடன் மோதும் விஜய்

Thursday, December 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் அந்த தேதிக்கு முந்தைய வாரமும், பிந்தைய வாரமும் எந்த பெரிய படமும் வெளியாகாது. இந்த நிலையில் வரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் பேட்ட' திரைப்படமும், அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகி வருகிறது சற்றுமுன் வெளியான புதிய தகவல் ஒன்றின்படி இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தை வரும் 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதே தினத்தில்தான் தளபதி விஜய்யின் 'விஜய் 63' திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே 2019ஆம் ஆண்டில் ரஜினி படத்துடன் அஜித் மற்றும் விஜய் படங்கள் மோதவுள்ளது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.