close
Choose your channels

என் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்.. நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. இயக்குனர் மோகன் ஜி

Tuesday, February 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான ’பகாசூரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் வசூல் அளவில் திருப்திகரமான வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பையும் அந்த படத்தின் ஹீரோவையும் மோகன் ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானாலும் ’திரெளபதி’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் மோகன் ஜி பரபரப்பான இயக்குனராக மாறினார். அதன் பிறகு அவரது இயக்கத்தில் உருவான ‘ருத்ரதாண்டவம்’ மற்றும் ‘பகாசூரன்’ என்ற திரைப்படங்களும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு வசூலையும் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் கலவையான விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் அடுத்த படத்தின் பணிகளை இயக்குனர் மோகன் ஜி தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் 'சில மீடியாக்களுக்கு.. இவர் யாருன்னு தெரியுதா? காசி கங்கா ஆர்த்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. எல்லா கடவுளையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார்.. நீங்களா ஏதாவது கிளப்பி விடாதீங்க.. அப்புறம் ஒரு முக்கியமான செய்தி, என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார் தான்.. அறிவிப்பு விரைவில்.. என்று தெரிவித்துள்ளார்.

அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரரான ரிச்சர்ட் தான் மோகன் ஜி இயக்கும் அடுத்த படத்தின் நாயகன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் காசி கங்கை கதைக்களமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.