close
Choose your channels

'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் தேதி இதுவா? விக்ரம் ரசிகர்கள் குஷி..!

Tuesday, February 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது.

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக தாமதமான நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது என்பதும் தற்போது படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்தோம். சமீபத்தில் கூட இந்த படத்தின் பின்னணி இசைப்பணியை தொடங்கிவிட்டதாக ஹாரிஸ் ஜெயராஜ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் மே 19ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விக்ரம் நடிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் மூன்றே வாரங்களில் ’துருவ நட்சத்திரம்’ படமும் ரிலீஸ் ஆக உள்ளதால் விக்ரம் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.