close
Choose your channels

த்ரிஷாவின் அடுத்த படத்தை இயக்கப்போவது இந்த பிரபலமா? மல்டிஸ்டார் படம் என தகவல்..!

Friday, May 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 67-வது திரைப்படமான ’லியோ’ திரைப்படம் இந்த படத்தின் நாயகியான த்ரிஷாவுக்கும் 67வது திரைப்படம் என்ற ஆச்சரியமான தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் த்ரிஷாவின் 68வது படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

த்ரிஷாவின் 68வது திரைப்படத்தை இயக்குனர் கௌரவ் நாராயணன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ’தூங்கா நகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌரவ் நாராயணன் அதன் பிறகு ’சிகரம் தொடு’ ’ஆறாது சினம்’ ’இப்படை வெல்லும்’ ’எஃப் ஐ ஆர்’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் ’கொற்றவை’ மற்றும் ’பீட்சா 3’’ ஆகிய படங்களை இயக்கியுள்ள நிலையில் இவருடைய அடுத்த படத்தில் த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்டதாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலக பிரபலங்கள் நடிக்கும் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருக்கிறது என்றும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா ஏற்கனவே ’தி ரோடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.