close
Choose your channels

பூஜா ஹெக்டேவை அடுத்து 'பீஸ்ட்' படப்பிடிப்பை முடித்த இன்னொரு பிரபலம்!

Friday, December 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் தன்னுடைய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் தான் மகிழ்ச்சியுடன் விடை பெற்றுக் கொள்வதாகவும் இந்த படத்தில் நடித்தது தனக்கு மிகவும் சந்தோசமாக இருந்ததாகவும், விஜய் சார் மற்றும் நெல்சன் ஆகியோர் கூட்டணியில் இந்த படம் மிக நன்றாக வந்திருப்பதாகவும் பூஜா ஹெக்டே பேசிய வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் பூஜா ஹெக்டேவை அடுத்து தற்போது இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த அபர்ணா தாஸ் தனது காட்சியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகிய இருவருமே ‘பீஸ்ட்’ படப்பிடிப்பை முடித்த நிலையில் வெகு விரைவில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos