close
Choose your channels

அஜித்தின் சைக்கிள் ரைட் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

Thursday, February 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விரைவில் ’வலிமை’ படத்தின் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் அஜித் குறித்த செய்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் அதுவே ட்ரெண்டாகி வருகிறது என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் கூட அஜித் துப்பாக்கி சுடும் புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக அஜித் சைக்கிள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வட இந்திய மாநிலங்களில் அஜித் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் இந்த புகைப்படத்தில் இருக்கின்றன.

அஜித்துடன் சைக்கிளில் சென்ற ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் அஜீத்தின் சைக்கிள் ஓட்டும் திறனை பார்த்துதான் ஆச்சரியமடைந்ததாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர் இந்த பயிற்சியில் ஈடுபட்டதாகவும் அவருடன் நாங்கள் சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிளில் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல்களும் அஜித் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

அஜித் ஏற்கான்வே பைக் ரேஸ், கார் ரேஸ், ஏரோ மாடலிங், போட்டோகிராபி, சமையல் உள்ளிட்டவற்றிலும் வல்லவர் என்பதும், கடந்த சில வருடங்களாக துப்பாக்கிச் சுடுதலிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.